13 May, 2020
கடந்த மார்ச் மாதம் இலங்கையில் கொவிட் - 19 தொற்று நோய் பரவ ஆரம்பித்ததன் பின்னர் இடம் பெற்ற பொதுத் தேர்தலுக்கான வேட்பமனு தாக்கல் செய்துள்ள வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் என்பன தமது அரசியல் நலன்களை மேம்படுத்தும் விதத்தில் பொருட்கள் மற்றும் சேவைகளை விநியோகித்துள்ளமை தொடர்பில் எமக்கு முறைப்பாடுகள் கிடைக்க ஆரம்பித்துள்ளன.
அதற்கேற்ப பெப்ரல் அமைப்பு இம்முறைப்பாடுகள் தொடரபில் தகவல்களைச் சேகரித்துள்ளதோடு அவ்வாறான முறைப்பாடுகள் பல மாவட்டங்களிலிருந்தும் எமக்கு கிடைத்தவண்னமுள்ளது.
பெப்ரல் அமைப்பின் நீண்ட கால தேர்தல் கண்காணிப்பாளர்களின் ஊடாகக் கிடைக்கப் பெற்ற இது தொடர்பான முறைப்பாடுகளில் மக்களுக்கு உலர் உணவு, பாதுகாப்பு உடைகள் / முகக் கவசங்கள் விநியோகம், பாதிப்புற்ற மக்களுக்கு வழங்கப்படும் மானிய நிதி தொடர்பில் ஏற்படுத்தப்பட்ட பிரச்சினைகள் மற்றும் உணவுப் பொதிகள் விநியோகம் என்பன முக்கிய முறைப்பாடுகளாக அமைந்துள்ளன.
அரசாங்கம் கொவிட் - 19 தொற்று நோயினை ஒழப்பதற்கு வேறான அரச பொறிமுறை ஒன்றினை உருவாக்கியுள்ள நிலையில் அப்பொறிமுறையினைப் பலப்படுத்தி மக்களுக்கு நிவாரணம் பெற வழியமைப்பதை விடுத்து அவற்றினை தமது மற்றும் கட்சியின் மேம்பாட்டுக்காக விசேடமாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இந்நிலையில் பயன்படுத்துவது சனநாயகத்துக்கு ஊறுவிளைவிப்பதுடன் அங்கீகரிக்கப்பட முடியாத விடயமுமாகும்.