27 September, 2022
மாத்தளை மாவட்டத்திலிருந்து மாற்றத்திற்கான பாதை கற்கை நெறிக்கு தெரிவுச்செய்யப்பட்ட பெண் தலைவர்கள், அவர்கள் இக்கற்கைநெறி மூலமாக பெற்றுக்கொண்ட அறிவினைக் கொண்டு மாத்தளை மாவட்டத்திற்கான செயற்திட்டத்தினை மாத்தளை கும்பல்ஒழுவ ஸ்ரீ மாணிக்க முருகன் ஆலய வளாகத்தில் 2022 செப்டம்பர் மாதம் 25ம் திகதி ஞாயிற்று கிழமை " போதை பொருளை ஒழிப்போம், நாட்டை காப்போம்" எனும் தொனிப்பொருளின் அடிப்படையில் ஏற்பாடு செய்திருந்தனர்.
மாத்தளை மாவட்ட மாதர் குழுவின் திருமதி. வி.எம். திலகவதியின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அதேவேளை, அம்மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றத்திற்கான பாதை மகளிர் குழு உறுப்பினர்களாகிய திருமதி. அசலா ராஜகருணா மற்றும் திருமதி. இரேஷா மல்வத்தகே ஆகியோரின் பங்குபற்றுதலுடன் சிறப்பாக இடம்பெற்றது.
இந் நிகழ்வில் மாகல்லாவ ஸ்ரீ விஜய அறநெறி பாடசாலையின் பிரதான பொறுப்பாளரான வணக்கத்துக்குரிய திலும்புர சங்காநந்த பிக்கு மற்றும் ஸ்ரீ மாணிக்க முருகன் ஆலயக குருக்கள் வணக்கத்துக்குரிய பழனிவேலு சிவபாலன் ஐயா, பிரதேச சபை உறுப்பினர்கள், அரச உத்தியோகத்தர்கள், பெற்றோர் உட்பட விருந்தினர்கள் மற்றும் இருமொழிமூல அறநெறி பாடசாலை மாணவர்கள் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்வில் போதை ஒழிப்பு தொடர்பிலான கலை நிகழ்வுகள் அறநெறி பாடசாலை மாணவர்களால் முன்வைக்கப்பட்டதுடன் அவர்களுக்கு ஏற்பாட்டு குழுவினரால் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் சக்தி , சிரச மற்றும் தெரன தொலைக்காட்சிகள் ஊடக பங்களிப்பினை வழங்கியிருந்தமை குறிப்பிடதக்கது.