30 September, 2022
மாற்றத்திற்கான பாதை கற்கை நெறி மூலம் பெற்றுக்கொண்ட அறிவினை பயன்படுத்தி இரத்தினபுரி மாவட்டத்திற்கான செயற்திட்டம் 2022.09.28ம் திகதி இரத்தினபுரி திரிவானாகெடிய சரண செவன பெண்கள் பாதுகாப்பு இல்லத்தில் இடம்பெற்றது.
மாத்தளை மாவட்ட மாதர் குழுவின் திருமதி. நயனா அதுகோரலவின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அதேவேளை, அம்மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றத்திற்கான பாதை மகளிர் குழு உறுப்பினர்களாகிய திருமதி. இந்திராணி மெனிகே மற்றும் திருமதி. தினலி தர்மபால ஆகியோரின் பங்குபற்றுதலுடன் சிறப்பாக இடம்பெற்றது.
இவ் இல்லத்திற்கு நிறப்பூச்சு பூசுதல் இவர்களது செயற்திட்டமாக அமைந்த அதே வேளை அதற்கான வளங்களை அனுசரனையாளர்கள் மூலமாக ஏற்பாடு செய்திருந்தமைக் குறிப்பிடதக்கது.
இந் நிகழ்வில் இரத்தினபுரி திரிவானாகெடிய விகாரையின் வணக்கத்துக்குரிய பிக்கு மற்றும் அம்மாவட்டத்திற்கான மக்கள் சக்தி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பிரதேச சபை உறுப்பிர்கள் & முன்னாள் உறுப்பினர்கள், அரச உத்தியோகத்தர்கள்,மற்றும் பெற்றோர்கள் கலந்துக் கொண்டனர்.